“பொறுக்கணும்! பொறுக்கணும்! பொறுக்கணும்!!!” அந்த பிஞ்சின்
கதறலை கலைக்க அவள் கத்திக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்சம் அழுத்தி
கடித்திருந்தால் இரத்தம் பீறிட்டிருக்கும். முதல் படி எடுத்து வைத்தும் அதன் அழுகை
சற்று குறையவே நறுக்கென்று ஒரு கிள்ளு, மீண்டும் வீறிட்டது.
நகர மையத்தில் இருந்த அந்த
பேருந்து நிலையத்தில் கட்டணக்கழிப்பிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அந்த பேருந்தின்
அத்தனை இருக்கைகளும் கிட்டதட்ட நிரம்பிவிட்டிருந்தன.
நைந்து போன சட்டைக்கு
அழுக்குச்சாயம், அந்த ஆண்வர்க சட்டைடைக்கு பெரிய பெரிய பூபோட்ட சிவப்பு பாவாடையுடன் ஒரு
நடுத்தர வயது பெண். பாவாடையின் பூக்களும் அவள் முகம் போலவே செம்பழுப்புடன் அழுக்கு
மண்டி இருந்தது. மேல்மட்டத்தவர்கள் செய்துகொள்வது போன்றதொரு அலங்காரம் நெடுநாள்
நீர் காணா அவள் முடிக்கு இயற்கை தந்திருந்தது. என்ன செய்வது அது மழைக்காலமில்லையே!
அவளிடுப்பில் இருந்த அந்த
பிஞ்சுக்கும் அவள் சாயல் இருந்த்தது. அழுக்கு முகம், கிழிந்த ஆடை, பழுப்பு முடி,
ஈக்கள் மொய்க்க கையில் ஒரு குச்சி மிட்டாய். உதட்டைச் சுற்றி ஒரு எண்ணை ஓவியம்.
பேருந்தின் அத்தனை
ஜன்னல்களையும் நோட்டமிட்டபடி பின்பக்கமாக நடந்தாள். பார்வைப்புலம் மறையத்தொடங்கிய
இடம் “பொறுக்கணும்! பொறுக்கணும்...!” அதட்டியவாரே
குழந்தையின் பிஞ்சுக்கையை கடித்தாள். கோரப்பற்களால் ஈவு இரக்கமின்றி கடித்தாள்.
அதட்டலை அழுகை வெல்லும் மட்டும் கடித்தாள். “பொறுக்கணும்! பொறுக்கணும்...!” இதை
நீ பொறுத்தே ஆகனும். பிச்சைக்காரிக்கு பிறந்தது
உன் குற்றமில்லை என்றாலும் பெற்ற கூலிதர நீ பொறுத்தே ஆகனும்.
அழு அழு எதற்காக
வேண்டினாலும் அழு. என்னை ஏன் பெற்றாய் என அழு. முற்பிறவி பலனோ இப்பிறவி சாபமொ
காரணம் தெரியாமலே அழு. உன் கதறல் ஆண்டவன் செவி எட்ட தேவை இல்லை, அதிகபட்சம் இந்த
பேருந்தையாவது எட்டட்டும் அழு. இருக்கையில் சொகுசாக இருக்கும் அத்தனை விழிகளும்
உன்னை பார்க்குமட்டும் அழு. அப்பொழுதுதான் அள்ளித் தராவிட்டாலும் கிள்ளியாவது
தருவார்கள் அழு. சத்தம் போட்டு அழு.
என்ன
கூச்சல் போட்டாலும் கையிலிருக்கும் மிட்டாயை மட்டும் விட்டு விடாதே. இங்கே நிறைய
கூட்டம் இருக்கிறது. முடிந்த வரை எல்லோரிடமும் கையை ஏந்துவேன். இன்று முழுவதும்
உன்னை சமாதனப்படுத்த எனக்கு அந்த மிட்டாய் வேண்டும். எல்லா நேரமும் உன் கதறலை
என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
அழுது அழுது தொண்டை வறண்டு போனால் ஒரே ஒரு முறை மட்டும் மிட்டாயை வாயில் வைத்துக்கொள், கடித்து மென்று விடாதே. பெற்றது
என் குற்றமுமல்ல பிறந்த்து உன் குற்றமுமல்ல. அதற்க்காக இதை நீ பொறுத்தே ஆகனும்
“பொறுக்கணும்! பொறுக்கணும்...!”
Nanba,
பதிலளிநீக்குUn kathai
Kathai alla Nijam!
Oru Ganathil Kadanthu vidugindra Nigakvugalai
Pathivugalaga pathiyam poaduvathagavae un kathai kaangirathu!
Nana Unakku oru Thagaval,
Nanba,
Un kathai
Kathai alla Nijam!
Oru Ganathil Kadanthu vidugindra Nigakvugalai
Pathivugalaga pathiyam poaduvathagavae un kathai kaangirathu!
Nana Unakku oru Thagaval,
" என்ன செய்வது அது மழைக்காலமில்லையே!"
Ithu Un Vari,,,,,
"Yenna saivathu malaikkendru ini oru kalmae illayae"
Ithu en Vari :)
Kulanthai kai kadithae kutram saernthu karai
koandathoa aval pavap parkal!
" உன் கதறல் ஆண்டவன் செவி எட்ட தேவை இல்லை, அதிகபட்சம் இந்த பேருந்தையாவது எட்டட்டும் அழு.."
Alagu!
yenthanai murai padithaalum vasam kundraatha vanamai un varigal vanappathu innum sirappu!
Vaalthukkal!!!!
Anbudan,
Raja