திங்கள், 17 டிசம்பர், 2012

பணமழை



ஒரு நாள் வானம் இடி இடித்தது, மேகங்கள் விலகிச்சென்றன. ஒரு தவளை தன் இணைக்காக குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. வானத்தில் பணம் மழையாக பொழிந்த்து.
எல்லோரும் குடையை திருப்பி பிடித்துக்கொண்டு நடந்தனர். கூடைகளில்,பொட்டலங்களாக,பொதிகளாக சுமந்து பணத்தை சேகரித்து கொண்டிருந்தனர்.
சேகரித்த பணத்தை கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தனர்.
அண்டை மாநில அணைக்கட்டுகளின் அத்தனை மதகுகளையும் திறக்க உத்தரவிட நினைத்தனர். தடையில்லா மின்சாரம் தாராளமாய் பெற நினைத்தனர்.
ஒருவன் பணத்தை அடுக்கி வீடு கட்ட நினைத்தான். அப்பகுதி பிச்சைக்காரனாக அறியப்பட்ட அவனிடம் அவ்வளவு பணம் இருந்த்து.
நினைத்ததை எல்லாம் செய்ய நினைத்தனர்.
அவர்கள் நினைத்தது எல்லாம் நடந்திருக்கும், அணைக்கட்டை திறப்பவன் பணத்தை எண்ணிக்கொண்டிராமல் இருந்திருந்தால்,
அரிசிக்கு எடைக்கு எடை பணம் பேரமாகாமல் இருந்திருந்தால்,
அந்த தவளை கத்தாமல் இருந்திருந்தால்,
எல்லாம் பழையபடி இருந்திருக்கும், காண்பது கனவாக இருந்திருந்தால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக